பொது செய்தி

தமிழ்நாடு

நெல் நடவு இயந்திரங்கள் வாடகைக்கு வேண்டும்: வேளாண் பொறியியல் துறைக்கு வலியுறுத்தல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

உடுமலை:நெல் நடவுக்கான இயந்திரங்களை, குறிப்பிட்ட சீசனில், வாடகைக்கு கிடைக்க, வேளாண் பொறியியல் துறை மூலம், நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, விவசாயிகள், நெல் சாகுபடியை கைவிட துவங்கினர். நாற்றங்கால் அமைத்து, நாற்றுகள் நடவுக்கு குறித்த நேரத்தில் தயார் செய்யப்பட்டாலும், நடவுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், சாகுபடியில், பாதிப்பு ஏற்பட்டு வந்தது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, வேளாண்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், இயந்திர நடவு முறை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே ஏற்படுத்தப்பட்டது. இதற்கான இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு, 8 ஏக்கர் வரை நடவு பணிகளை மேற்கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு, இயந்திர திறனை பொறுத்து, 3,500 ரூபாய் முதல், 4 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட்டது. ஒரு ஏக்கரில், நாற்று நட, 20 ஆட்கள் தேவையுள்ளது.விவசாயிகள் கூறியதாவது:உடுமலை பகுதியில், அனைத்து சாகுபடியிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. நெல் நடவுக்கு, இயந்திரங்கள் உதவியாக உள்ளது. ஆனால், இந்த இயந்திரங்களை, குறிப்பிட்ட சீசனில், வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விட்டால், அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இதே போல், வேளாண்துறை மூலம், பின்னேற்பு மானியமும், வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X