பொது செய்தி

தமிழ்நாடு

வலைதளத்தில் கதை கூறி அசத்தினார்: பூலாங்கிணர் அரசு பள்ளி ஆசிரியர்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வலைதளத்தில் கதை கூறி அசத்தினார்: பூலாங்கிணர் அரசு பள்ளி ஆசிரியர்

உடுமலை;சமூக வலைதளத்தில், மாணவர்களுக்கு விடுமுறை காலத்தை 'கதை கூறி கற்பித்தல்' முறையில் சுவாரஸ்யமாக மாற்றி வருகிறார் உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் சரவணன்.கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்கள் வீட்டில் உள்ளனர். மாணவர்களின் மனநிலையை சீராக்கவும், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், சமூக வலைதளத்தை பாடசாலையாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சரவணன்.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்புக்கான தமிழாசிரியராகவும், பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும் பணியாற்றுகிறார். கொரோனா ஊரடங்கினால், மாணவர்கள் வீட்டில் இருப்பதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.மேலும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை எப்போதும் மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என, சமூக வலைதளத்தை பயன்படுத்தி 'யூ டியூப்'பில் மேல்நிலை பாடங்களை செயல்விளக்கத்துடன் புதுவிதமாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறார். ஆசிரியர் சரவணன் கூறியதாவது:யூ டியூப் மூலம் தற்போது, மேல்நிலை வகுப்புக்கான ஒவ்வொரு பாடங்களையும், செயல்விளக்கத்தோடு, மாணவர்களுக்கு கூறுகிறேன்.பாடங்களில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து கூடுதல் மற்றும் வரலாற்றில் நிகழ்ந்த தகவல்களை, ஆதாரத்துடன் சேகரித்து விளக்கம் அளிப்பது தான் நான் பாடம் நடத்தும் முறை.அதையே, இப்போதும் பின்பற்றுவதால், எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, பலருக்கும் இது பிடித்துள்ளது. தவிர, குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல சிந்தனை வளர்க்கும் கதைகள் கூற வேண்டும் என பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.இதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையிலும், பல கதைகளையும் அவர்களுக்கு பிடித்த முறையில் கூறி வருகிறேன். இதனால், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X