விபத்து உயிரிழப்பு 50 சதவீதம் குறைவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'விபத்து உயிரிழப்பு 50 சதவீதம் குறைவு'

Added : ஜூலை 27, 2020
Share
கோவை:கொரோனாவால், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், 50 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால், கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் கொரோனாவால், நடப்பாண்டு சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், 50 சதவீதம் வரை

கோவை:கொரோனாவால், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், 50 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால், கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் கொரோனாவால், நடப்பாண்டு சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், 50 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.கடந்தாண்டு ஜன., முதல் கடந்த, 23ம் தேதி வரையிலான காலத்தில், 607 விபத்துக்கள் ஏற்பட்டன. இதில், 74 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு இதே காலகட்டத்தில், 355 விபத்துக்கள் நடந்த நிலையில், 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில்,''ஊரடங்கு காலகட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகள், 50 சதவீதம் வரை குறைந்தது. போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால், உயிரிழப்புகளை தவிர்க்கலாம். வரும் காலங்களில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X