பொது செய்தி

தமிழ்நாடு

கேரள இடம் பெயரும் காட்டு யானைகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பகுதிகளில் இருந்து, கேரள வனப்பகுதிக்கு யானைகள் படையெடுக்க துவங்கியுள்ளன.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, ஆழியாறு, நவமலை, டாப்சிலிப், சேத்துமடை, சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.இவை, வனத்திலுள்ள மரங்களில் உதிரும் இலைகளையும், மூங்கில் மரம், ஊஞ்சல் மற்றும் தடசு உள்ளிட்ட மரங்களின் பட்டைகள், பழங்கள், மரங்களை சாப்பிடுகின்றன.ஆண்டுதோறும், மார்ச் முதல் மே வரையிலான கோடையில், இப்பகுதிகளில் உள்ள யானைகள் ஆழியாறு அணைப்பகுதி, நீரோடை உள்ளிட்ட நீராதாரங்களைத் தேடி பயணிப்பது வழக்கம்.அதேபோல், ஜூன் மாதம் முதல் பிப்., வரையிலான மழைக்காலத்தில், இனப்பெருக்கம், உணவுக்காக கேரளாவிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு செல்லும். இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தில் கடும் வறட்சியை சமாளிக்க, ஆழியாறு அணைப்பகுதிக்கு யானைகள் வந்தன.ஆழியாறு சின்னாறுபதி, நவமலை, பொன்னாலம்மன்துறை, சேத்துமடை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் புகுந்தன.இதனால், மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்தன. வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திவந்தனர்.இந்நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால், அடந்த வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர்கின்றன. வனத்தையொட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வனத்துறையினர் கூறியதாவது:தென்மேற்கு பருவமழை காலத்தில், கேரள வனப்பகுதியில் அதிக மழைப்பொழிவு இருப்பதால், வனம் பசுமையாக இருக்கும். யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும். இதனால், ஆண்டுதோறும் இந்த சீசனில் கேரள பகுதிகளிலுள்ள அடர்வனத்தினுள் யானைகள் இடம்பெயரும்.தற்போது, ஆழியாறு பகுதியிலுள்ள யானைகள், வால்பாறை வழியாக, பரம்பிக்குளம், மூணாறு, தேக்கடி உள்பட பல்வேறு கேரள பகுதிக்கு இடம்பெயர்கின்றன.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X