அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆனந்தனுக்கு 'பை பை'; அருணுக்கு 'ஹாய்': புதிய இணைப்பால் அ.தி.மு.க.,வினர் 'ஜாய்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் உள்ளடங்கிய, அவிநாசி தொகுதி, திருப்பூரில் இருந்து, கோவை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டதால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவானது. அப்போது, அவிநாசி தொகுதியின், அவினாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன.அன்னூர் ஒன்றியம், அ.தி.மு.க.,வில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரின் கீழ் அன்னூர் நிர்வாகிகள் செயல்பட்டனர்.அன்னூர் ஒன்றியத்தை கோவை மாவட்டத்தில் சேர்க்க, நிர்வாகிகள் பலமுறை தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.நேற்று முன்தினம், தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'அன்னூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய அவிநாசி தொகுதி கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது. இது கட்சியினரிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.அன்னுர் அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'மாவட்ட அளவிலான கட்சி போராட்டம், கட்சி நிகழ்ச்சி என்றால் திருப்பூர் செல்ல வேண்டியிருந்தது. மற்ற அனைத்துக்கும், கோவை தான் செல்கிறோம். இது மிகுந்த சிரமமாக இருந்தது. தற்போது இதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில், அவிநாசி தொகுதி சேர்க்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது' என்றனர்.இதுவரை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தனுக்கு கீழ், செயல்பட்டு வந்த அன்னூர் ஒன்றிய நிர்வாகிகள், இனி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமாருக்கு கீழ், செயல்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X