சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்ச்சலுக்கு சிறுமி பலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்கிருஷ்ணகுமார். இவரது மகள் ஸ்ரீநிதி, 11. தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஸ்ரீநிதிக்கு, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. பெற்றோர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. வாந்தி எடுத்து மயங்கினார். பெற்றோர் சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X