பொது செய்தி

தமிழ்நாடு

வன பணிகளில் முன்னுரிமை கொடுங்க! மலைவாழ் மக்கள் சங்கம் முதல்வருக்கு மனு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, 17 செட்டில்மென்ட்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்களில், 17 பழங்குடியின கிராமங்கள் உள்ளன.இவற்றில் வனத்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் கட்டப்பட்ட வீடுகள் முற்றிலுமாக சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த கிராமங்களில், 15 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட, சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் பழங்குடியினர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.பழங்குடியினருக்கு அடிப்படை வசதி வேண்டி, பல ஆண்டுகளாக வன உரிமைக்குழுக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்று வரையில் தீர்வு காணப்படவில்லை.மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் காடம்பாறை, நவமலை, சர்க்கார்பதி போன்ற பகுதிகளில் கூட, பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.வேட்டைத்தடுப்பு காவலர்கள், தீத்தடுப்பு காவலர்கள் உள்பட பல்வேறு பணிகளை, பழங்குடியினருக்கு வழங்காமல், தங்களுக்கு வேண்டப்பட்ட, வனத்தை பற்றியே தெரியாத நபர்களுக்கு பணி வழங்குகின்றனர். பழங்குடியினர் வாழ்வாதாரம் காக்க, வனத்துறை பணிகளில் முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும். செட்டில்மென்ட்களில், குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தி, பழுதடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க, மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X