துப்பாக்கி சுருக்குக் கம்பி வைத்து வேட்டையாட முயற்சி; 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுருக்குக் கம்பி வைத்து வேட்டையாட முயற்சி; 4 பேர் கைது

Added : ஜூலை 27, 2020
Share
மேட்டுப்பாளையம்;சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை பீட், பாலப்பட்டி வேடர்காலனி வனப்பகுதியில், துப்பாக்கியை வைத்து மான், முயல், காட்டுப்பன்றி ஆகிய வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நான்கு பேர் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.இதில் பாலப்பட்டியைச்
 துப்பாக்கி சுருக்குக் கம்பி வைத்து   வேட்டையாட முயற்சி; 4 பேர் கைது

மேட்டுப்பாளையம்;சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை பீட், பாலப்பட்டி வேடர்காலனி வனப்பகுதியில், துப்பாக்கியை வைத்து மான், முயல், காட்டுப்பன்றி ஆகிய வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நான்கு பேர் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.இதில் பாலப்பட்டியைச் சேர்ந்த குமார், 42, சுரேஷ், 31, செல்வராஜ், 38, ஊமப்பாளையம் மனோஜ், 29 ஆகிய 4 பேரிடமிருந்து உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், நான்கு பேருக்கும் தலா பத்தாயிரம் வீதம், 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அதே பகுதியில் சுருக்கு கம்பிகளை வைத்து, முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற பழனிச்சாமி என்பவரை, கைது செய்த சிறுமுகை வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X