பொது செய்தி

தமிழ்நாடு

புல வரைபடம் பதிவிறக்கத்தில் சிக்கல்: பிரச்னைக்கு தீர்வு காண

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:இணையதளத்தில் விவசாய நிலம் தொடர்பான புல வரைபடம் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விவசாய நிலம் தொடர்பான கணினி சிட்டா, புல வரைபடம், 'அ' பதிவேடு போன்றவைகள் தாசில்தார் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டு இருந்தது.இதனை பயன்படுத்தி விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தும் வந்தனர்.கடந்த சில நாட்களாக இணையதளத்தில், புல வரைபடம் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.தாசில்தார் இணையதளத்திற்கு சென்றால், பட்டா விபரம் என்பதை தேர்வு செய்து, மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் உள்ளீடு செய்தால், புல வரைபடம் கணினி திரையில் தெரிகிறது.அதில், மாவட்டம், கிராமம், புல எண் மற்றும் புல எண்ணின் விஸ்தீரணம் தெரிகிறது. சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் வரைபடம் மட்டும் தெரிவதில்லை.இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் புல வரைபடம் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.இதுகுறித்து, தாலுகா அலுவலகத்தில் கேட்கும்போது, புல வரைபடம் தொடர்பாக சென்னை சர்வரில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதனால், புல வரைபடம் பதிவிறக்கம் செய்யும் வசதியில் சிக்கல் நிலவுகிறது என்று தெரிவிக்கின்றனர்.புலவரைபடம் பதிவேற்றம் செய்யும் பணி முடித்து, இணையதளத்தில் எளிமையாக புல வரைபடம் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வருவாய்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X