அரசியல் செய்தி

தமிழ்நாடு

தங்க நகை தொழிலாளர்களுக்கு ' கிளஸ்டர் '; பா.ஜ., நம்பிக்கை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:''தங்க நகை தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதிகளில், கிளஸ்டர் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று பா.ஜ., மாநில துணைதலைவர் வானதி சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.
கோவை மாநகரில் சுமார், 1.5 லட்சம் தங்கநகை தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் காணொளி பொதுக்கூட்டம், நேற்று மாலை நடந்தது.இதில், பா.ஜ.,மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''தங்க நகை தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதிகளில், பிரதமரின் ஜன்அவுஷதி மருந்துக்கடை, முத்ரா திட்டத்தில் வங்கிக்கடன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தங்கநகை தொழிலாளர்களுக்கான, 'கிளஸ்டர்' அமைக்கப்படும்,'' என்றார்.மாநில ஊடக பிரிவு செயலாளர் சபரிகிரீஷ், 19 தங்கநகை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள், இணையவழி காணொளி கூட்டத்தில் இணைந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X