மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உள்ளார்.ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி வந்த தேநீர் கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவல் காரணமாக நசிந்து போனது. அதனால் அவர் தன்

திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உள்ளார்.latest tamil newsஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி வந்த தேநீர் கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவல் காரணமாக நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.

ஆனால் டிராக்டர் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு வாங்க பணமில்லாததால் தன் இரு மகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உழவு மாடுகள் வழங்க முடிவு செய்தார்.


latest tamil news


இது தொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வயலில் உழவு செய்தவதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிப்பதாகவும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார். ஆனால் உழவுமாடுகளுக்கு பதிலாக டிராக்டர் வாங்கி தந்துள்ளார் நடிகர் சோனு சூட். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூலை-202015:52:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni அந்த உழவன் என்ன செய்வான் தெரியுமா ...
Rate this:
baala - coimbatore,இந்தியா
29-ஜூலை-202014:32:52 IST Report Abuse
baalaenna seivargal entru sollungal....
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
27-ஜூலை-202012:42:39 IST Report Abuse
R S BALA திரு.சோனு சூட் இது போன்ற உதவிகளை அதிகம் செய்து வருவதை செய்திகளில் காண முடிகிறது ... அவருக்கு எனது வாழ்த்துக்கள் .. ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் உண்மையில் ஒரு நடிகரை விட யாருக்கு பொறுப்பும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உள்ளது என்ற கேள்விக்கு பதில் இல்லை ...
Rate this:
Cancel
Raja Eswaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-202012:33:18 IST Report Abuse
Raja Eswaran உன்னத மனிதன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X