பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்பு!சிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
  உடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்பு!சிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை

உடுமலை:உடுமலை நகராட்சி, எல்லையை விரிவுபடுத்தி, தரம் உயர்த்துவதற்கான கருத்துரு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி, 1984ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, நகராட்சியில், 33 வார்டுகளும், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 61,150 மக்கள் தொகை உள்ளது. நகராட்சி பரப்பு, 7.41 சதுர கி.மீ., ஆக உள்ளது.இயல்பு நிலை கணக்கு நடைமுறையில், வருவாய் மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என நிதிவாரியாக பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுவதில், ஆண்டு வருமானம் 13.29 கோடி ரூபாயாக உள்ளது.ஆண்டு வருமானம் 13 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதால், உடுமலை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த, கருத்துரு அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.தற்போது, நகராட்சியின் வரியில்லா வருவாய் இனங்கள் மூலம், 2 கோடியே 52 லட்சம் ரூபாயும், வைப்புத்தொகையாக 5 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளது. தேர்வு நிலை நகராட்சியிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் நிலையில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால், நகராட்சி நிர்வாகம் சார்பில், வருவாய் இனங்கள் உட்பட தகவல்கள் தொகுக்கப்பட்டு, அரசுக்கு பல முறை கருத்துரு அனுப்பப்பட்டது.இவ்வாறு, நகராட்சி தரம் உயர்த்தப்படும் நிலையில், 7.41 சதுர கி.மீ., மட்டுமே உள்ள எல்லையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது.அதன்படி, நகராட்சி எல்லையிலுள்ள போடிபட்டி, கண்ணமநாயக்கனுார், பெரியகோட்டை, குறிஞ்சேரி, ராகல்பாவி, சின்னவீரம்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கவும், நகராட்சி நிர்வாகம் சார்பில், கருத்துரு தயாரிக்கப்பட்டது.இதனால், வார்டு எண்ணிக்கைகள் அதிகரிப்பதுடன், நகருக்கு இணையாக வளர்ந்துள்ள கிராமங்களில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.இந்த கருத்துரு குறித்து, பல ஆண்டுகளாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, உடுமலை நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி, தரம் உயர்த்த அரசும், நகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X