பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணத்தில் பாகுபாடு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருநெல்வேலி : திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் காட்டும் பாகுபாட்டால், நேற்று ஒரே நாளில் 15 செவிலியர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 800 பேர், சித்த மருத்துவமனையில் 160 பேர், கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து, ஒரு வாரம் ஓய்வில் சென்ற செவிலியர்கள் 15 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, ஆறு செவிலியர்கள் சிகிச்சையில் உள்ளனர்.செவிலியர்கள் கூறுகையில் 'அரசு டாக்டர்களுக்கு வழங்குவது போன்ற பாதுகாப்பு உபகரணங்கள், எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. 'என் 95' முக கவசம் வழங்குவதுஇல்லை. முக கவசத்திற்கு மேல் அணியும் பாதுகாப்பு கிளாஸ், சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது.

'இதனால், செவிலியர்களுக்கு எளிதில் தொற்று பரவுகிறது. செவிலியர்கள் தங்க வைக்கப்ப ட்டுள்ள, வார்டில் சத்தான உணவு வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது' என்றனர்.அரசு மருத்துவமனையில், தினமும் உணவு வழங்குவதில் பற்றாக்குறை உள்ளதாக நோயாளிகளும் தெரிவித்தனர். இதைக் களைய, சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.இதற்கிடையில், தென்காசி அரசு மருத்துவமனை யில், கொரோனா உள்ளிட்ட நோயாளிகளுக்கு சாப்பாடு சீட்டு வழங்கும் பணியாளர் கணேசன், ஒவ்வொரு நோயாளியிடமும் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார். இது குறித்து, நோயாளிகள் எடுத்த வீடியோ பரவியதால், அவர் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X