பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு அணை நிரம்புமா? எதிர்பார்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 ஆழியாறு அணை நிரம்புமா? எதிர்பார்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்

ஆனைமலை:ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில், பருவமழை பெய்வதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பாண்டு அணைநிரம்புமா என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள பாசனம் மற்றும் குடிநீருக்காகவும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆழியாறு அணை நீரை நம்பி, 13 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், 2018ல் பருவமழையால் அணை நீர்மட்டம் ஜூலை மாதம் முதல் உயர்ந்து ஆக., மாதம் அணை நிரம்பியது. அதேபோல், கடந்தாண்டு நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருந்ததால், நவ., மாதம் முழு கொள்ளளவை எட்டியது.அதன்பின், மழையின்றி ஜன., இறுதி முதல் அணை நீர் மட்டம் தொடர் சரிவை கண்டது. மே மாத இறுதியில் மொத்தமுள்ள,120 அடியில், 52 அடிக்கு மட்டுமே நீர் மட்டம் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 120 அடியில், 59.90 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. வினாடிக்கு, 168 கன அடி நீர் வரத்தும், 134 கன அடி நீர் வெளியேற்றம் இருந்தது.வால்பாறை மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், சோலையாறு அணை மற்றும் பரம்பிக்குளம் அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.பி.ஏ.பி., திட்ட அணைகள் அனைத்துக்கும் நீர்வரத்து இருப்பதால், அணைகள் விரைவில் நிரம்பும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X