பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணிகளால் இம்சை :கடைவீதி வர்த்தகம் மீண்டும் முடக்கம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை பணிகளால் இம்சை :கடைவீதி வர்த்தகம் மீண்டும் முடக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளும் பணியால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், பாதாள சாக்கடை பணிக்காக நேற்று முன்தினம் திடீரென ரோடு தோண்டும் பணி நடந்தது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.மாரியம்மன் கோவில் வரை இப்பணிகள் நடைபெறுவதால், அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோடு தோண்டப்பட்டதால் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும், கடைக்காரர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா பரவல் கட்டுப்படுத்த கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டு இருந்தன. தடை செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு இருந்தால் தற்போது போக்குவரத்து இடையூறை தவிர்த்து இருக்கலாம்.கடந்த சில வாரங்களாக பூட்டப்பட்ட கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாதாள சாக்கடை பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வியாபாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.போக்குவரத்து நிறைந்த மற்றும் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ளும் போது, முறையான திட்டமிடல் மற்றும் முன்னறிவிப்புடன் செய்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X