பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு: நகர பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 முழு ஊரடங்கு: நகர பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு

பொள்ளாச்சி, உடுமலையில் நான்காவது வாரமாக ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. நகரில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தமிழகத்தில், இம்மாதம் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது வாரமான நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டம் முழுக்க, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், இன்று காலை, 6:00 மணி வரை முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது.வருவாய்துறை, போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை பிடித்து போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.சுகாதார பணிபொள்ளாச்சி நகராட்சிப்பகுதியில் நான்காவது வாரமாக ஊரடங்கை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில், இப்பணியை டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன் துவக்கி வைத்தார்.சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல், நகர்நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாகனங்கள், நகராட்சி வாகனங்களில், 36 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.உடுமலைஉடுமலை பகுதிகளில், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடந்தது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாமல், ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இறைச்சி, மீன் கடைகளில், நேற்றுமுன்தினம் இரவே, கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்கள், தனியார் இடங்கள் என, 34 இடங்களில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடந்தது. இங்கு, 'குடி' மகன்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. உள்ளூர் போலீசாரும், மது விலக்கு போலீசாரும் கண்டு கொள்ளவில்லை.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.கேரளா மாநில எல்லையில் உள்ள வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் அடைக்கப்பட்டது.
நெகமம் அருகேயுள்ள காட்டம்பட்டியில், கிணத்துக்கடவு தாலுகா எல்லை செக்போஸ்ட்டில் போலீசார்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வால்பாறைவால்பாறை நகரில் சந்தை நாளான நேற்று மார்க்கெட், கடைவீதி முழுவதுமாக அடைக்கப்பட்டன. இதனால், வால்பாறை நகர் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.அம்மா உணவம் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டது.நான்காம் கட்ட முழு ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் ஆதரவளித்து, வீட்டிற்குள்ளேயே முடங்கினர். - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X