பைக் விபத்து: ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்து: ஒருவர் பலி

Added : ஜூலை 27, 2020
Share

ஆனைமலை:கோட்டூர் அடுத்த அங்கலக்குறிச்சி அருகே, இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டதில், தபால் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.தாராபுரம் பெரியகுமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன், 57; வால்பாறையில் கருமலை எஸ்டேட் பகுதியில் தபால் நிலைய உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, வால்பாறையில் இருந்து தாராபுரம் செல்வதற்காக, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்கலக்குறிச்சி ஜே.ஜே., நகர் அருகே, எதிரே அதிவேகமாக வந்த பைக், இவரது பைக் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த, ஆழியாறு நகரை சேர்ந்த சரவணன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X