பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 1,933 பேருக்கு அபராதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 முகக்கவசம் அணியாத 1,933 பேருக்கு அபராதம்

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதிகளில், முகக்கவசம் அணியாத, 1,933 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசியம் இல்லாமல், பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.வெளியில் வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளி பராமரித்தல், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருத்தல், கை கழுவும் அமைப்பு, சானிடைசர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், ரோடுகளில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கவும், வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரைக்கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் நகர பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 5ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில், நேற்று வரை, 1,933 பேருக்கு, தலா 100 ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'முகக்கவசம் அணியாமல் வந்தால், முதல் முறை, 100 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை, 500 ரூபாயும், மூன்றாம் முறை போலீசில் வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, முதல் முறை அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இனிமேல் இரண்டாம் முறை அபராதமும், விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X