பொது செய்தி

தமிழ்நாடு

மண் வரப்பு அமைக்க அழைப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

உடுமலை:பருவமழையை அறுவடை செய்ய வசதியாக, வேலை உறுதி திட்டத்தில், மண் வரப்பு அமைக்கலாம் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பும், விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது. விளை நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேறாத வகையில், வரப்பு அமைத்து, தண்ணீரை தேக்கலாம்.விளைநிலத்தை சுற்றிலும் உயிர் வேலி அமைக்கலாம். கடந்த ஆண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 5,131 பயனாளிகள் இதன் மூலம் பயன்பெற்றனர்.நடப்பு ஆண்டில் இதுவரை, 2,180 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மொத்தம், 3,311 கி.மீ., நீளத்துக்கு வரப்பு அமைக்க, 47.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதுவரை, 155 கி.மீ., நீளம் மண் வரப்பு அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, நிலுவையில் உள்ள நிலையில், தொழிலாளர் தயாராக இருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில்மண் வரப்பு அமைக்க முன்வரவேண்டும்.தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், கிடைக்கும் நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களில் மண்வரப்பு அமைக்கலாம். எனவே, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X