பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் நின்ற கொம்பன் யானை: தோட்டக்கலை பணியாளர்கள் அச்சம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 சாலையில் நின்ற கொம்பன் யானை: தோட்டக்கலை பணியாளர்கள் அச்சம்

குன்னுார்:குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் நின்ற கொம்பன் யானையால் சிறிது நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையோர மலை பகுதிகளில், பலா பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன. தற்போது, இங்கு முகாமிட்ட யானைகள் பலா பழங்களை உட்கொண்டு வருகிறது.இந்நிலையில், நேற்று ரன்னிமேடு பகுதியில் இருந்து, மூன்று யானைகள் சாலையை கடந்து, காட்டேரி பூங்கா பண்ணைக்கு வர முயற்சித்தன. அதில், ஒரு சிறிய கொம்பன் யானை சாலையில் வந்து நின்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தோட்டக்கலை பணியாளர்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரத்தில் யானை வளப்பகுதிக்குள் சென்றது. வேட்டை தடுப்பு காவலர்கள் ஹரிகரன், லோகநாதன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X