சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம்: வருவாய்துறையினர் மீட்டனர்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மஞ்சூர்:மஞ்சூர் அருகே இரண்டு ஏக்கர், வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.மஞ்சூர் அருகே உள்ள பூதியாடா கிராமத்தைச் சுற்றிலும் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதுடன், அங்கு தேயிலை மற்றும் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாக வருவாய் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.குந்தா தாசில்தார் மகேஸ்வரி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தருமன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், கெஜலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஓடை புறம்போக்கு நிலத்தில் இரண்டு ஏக்கர் பரப்பில், மலை காய்கறி பயிரிட்டிருந்தது தெரியவந்ததை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.குந்தா தாசில்தார் மகேஸ்வரி கூறுகையில்,''வருவாய் துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட, போர்டு வைக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X