கால்வாயில் கழிவுநீர் கலப்பு தூர் வாரியும் பயனில்லை: அதிகாரி கைவிரிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 கால்வாயில் கழிவுநீர் கலப்பு தூர் வாரியும் பயனில்லை: அதிகாரி கைவிரிப்பு

காரைக்குடி:காரைக்குடியில் கழிவுநீர் வரத்தை தடுக்காமல் வரத்துக் கால்வாயை துார்வாரி பயனில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி பெரிய கண்மாயை நம்பி விவசாய நிலங்கள் உள்ளன. முக்கிய நீர் ஆதாரமாக அதலக்கண்மாய் வரத்துக்கால்வாய் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வரத்துக்கால்வாய், தற்போது காரைக்குடி நகரின்'மினி கூவமாக' மாறியுள்ளது. குடியிருப்புகள், தொழில் வளாகங்கள்,வணிக வளாகங்களின் கழிவு வரத்துக்கால்வாயில் கலக்கிறது.இந்த கழிவுநீர் பெரிய கண்மாயில் கலப்பதால், விவசாயம் பாதிப்பதோடு அருகில் உள்ள சம்பை ஊற்றின் தன்மையும் மாறி வருகிறது.

தற்போது நகராட்சி சார்பில், வரத்துக்கால்வாயைதுார்வாரும் பணி நடந்து வருகிறது. கால்வாயை துார்வாரினாலும் சாக் கடை வரத்து நிறுத்தப்படவில்லை.நகராட்சி ஆணையர் ரெங்கராஜன் கூறுகையில்;தற்போது நகராட்சிக்கு உட்பட்ட 3 வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. மழைபெய்தால் கழிவுநீர் அடித்துச் சென்றுவிடும். கழிவு நீர் கலப்பதை தற்போது தடுக்க முடியாது. பாதாளச்சாக்கடை திட்டம் முடிந்த பிறகே, இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X