பாலத்தை சேதப்படுத்திய யானை: கிராம போக்குவரத்து துண்டிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 பாலத்தை சேதப்படுத்திய யானை: கிராம போக்குவரத்து துண்டிப்பு

கூடலுார்:மேல்கூடலுார் அருகே, கிராமத்தின் பாலத்தை, யானை சேதபடுத்தியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், மேல் கூடலுார் அருகே, உள்ள சொரக்கா பட்டணம், கிராமத்திற்குள் நேற்று முன்தினம், இரவு, 11:00 மணிக்கு காட்டு யானை நுழைந்துள்ளது. மக்கள் அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை, நீரோடை குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை, கடந்து செல்ல முயன்ற போது, பாலம் இடிந்து, யானை நீரோடையினுள் விழுந்தது. பின், நீரோடை வழியாகவே யானை வெளியேறியது. இதனால், கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மக்கள் கூறுகையில்,'அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X