பொது செய்தி

தமிழ்நாடு

தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணி

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கான விதை சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கான விதைகள், மலர் செடிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. பின், பூங்கா நாற்றங்கால்களில் விதைக்கப்படும். பின், உற்பத்தியாகும் நாற்றுக்கள், கோடை சீசனுக்காக, பூங்காவில் உள்ள பாத்திகளில் நடவு செய்யப்படும். பூங்கா நிர்வாகிகள் கூறுகையில்,'மலர் செடிகளின் விதை சேகரிப்பு பணி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் துவக்கப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள பெண் ஊழியர்கள் விதை சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விதைகள் அடுத்தாண்டு மலர்க்கண்காட்சிக்கு மலர் செடிகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X