பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் கடத்தப்படும் மரங்கள் விசாரணைக்கு உத்தரவிட்ட வனத்துறை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விசாரணைக்கு உத்தரவிட்ட வனத்துறைஊட்டி, ஜூலை 27--

மஞ்சூர் அருகே சோலை மரங்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தப்படுவது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரியில், வனப்பகுதிகளில் உள்ள சீகை மரங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சீகை மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.அதன்படி, குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட தாய் சோலையிலிருந்து கிண்ணக்கொரை செல்லும் பகுதியில், வனத்துறை அனுமதியுடன் சீகை மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு கும்பல், வனப்பகுதியில் உள்ள காட்டு மரங்கள், தனியார் நிலத்தில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டி இரவு நேரங்களில் லாரிகளில் கடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது.குந்தா வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உதவி வனபாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''தாய் சோலை பகுதியில் சீகை மரங்கள் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில், இரவில் காட்டு மரம், பட்டா நிலங்களில் மரம் வெட்டி கடத்துவது குறித்த புகார் குறித்து, விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X