அழிந்து வரும் அரியவகை கடல் குதிரை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 அழிந்து வரும் அரியவகை கடல் குதிரை

ஆர்.எஸ்.மங்கலம்:தேவிபட்டினம், பனைக்குளம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அரிய வகை கடல் குதிரைகள் காணப்படுகின்றன.

இந்த அரிய வகை மீனுக்கு மற்ற மீன்களை பேன்று செவில், துடுப்புகள் உள்ளன. ஆனால் மீன்களை போன்று வடிவம் கொண்டதல்ல. தலைப்பகுதி குதிரையை போன்று இருப்பதால் இது கடல் குதிரை என அழைக்கப்படுகிறது.இதன் வால், குரங்கின் வால் போல நீண்டும், சுருண்டும், காணப்படும். இந்த வாலின் மூலம் கடற் தாவரங்களையும், பஞ்சுகளையும் பற்றிக் கொள்ளும். வாய் நீண்டு குழல் போலவும், மார்பு பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படும்.

உடலில் பக்கவாட்டு கோடுகளும், நீண்ட புள்ளிகளும் உள்ளன. முதுகு துடிப்பினை பயன்படுத்தி மெதுவாக நீந்தியும், பெரும்பாலும் குதித்து குதித்தும்செல்லும். மற்ற விலங்குகளில் இருந்து தற்காத்து கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. இந்தகைய அரியவகை கடல்குதிரை கடந்த சில ஆண்டுகளாக பாக்ஜலசந்தி பகுதியில் மீனவர்களின் வலைகளில் சிக்கி அழிந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X