சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவச பாராயணம்: 2 கோடி பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சென்னை : தமிழ் வரலாற்றில், முதல் முறையாக, வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில் 'ஆன்-லைன்' மூலம் நேற்று நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்றனர்.வாழும் கலை அமைப்பின் நிறுவனர்,

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சீடர்கள் மூலம் ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.வடபழநிஇந்த சஷ்டி பாராயணம், முதலில், கடந்த ஆண்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ., 15ல் நடந்த பாராயணத்தில், 30 லட்சம் பேர் நேரலையில் பங்கேற்றனர்.இந்நிலையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில், கந்த சஷ்டி பாராயணம் நேற்று மாலை நடந்தது.

பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து, பாராயணத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: கந்தசஷ்டி பாராயணம் எதற்கு என்றால், மனதில் உள்ள பயம் நீங்க, ஆத்ம பலம் கொடுப்பதற்கு. மனிதன் நோயின்றி நிம்மதியாக வாழ, முருகப் பெருமானை வணங்கி, கந்தர் சஷ்டி கவசம் பாட வேண்டும்.பரம்பரைஎங்கும் நிறைந்துள்ள கடவுள், நம் ஒவ்வொரு அங்கத்தையும் காப்பாற்ற வேண்டிக் கொள்வதே கவசம். சிவ கவசம், தேவி கவசம் போல, கந்தர் சஷ்டி கவச பாராயணம், பரம்பரை பரம்பரையாக வந்து உள்ளது.இறைபக்தி உள்ளவர், இல்லாதவர்கள் என பாகுபாடு இன்றி, அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என, முருகனை மனமுருக வேண்டி பாராயணம் செய்வோம்.மோரை கடைந்தால், அதில் மறைந்துள்ள வெண்ணெய் வெளி வருவது போல, கந்தர் சஷ்டி பாராயணம் செய்வதால், அன்பும், தைரியமும் வெளிப்படும்.

முருகப் பெருமான் ஞான சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வானை கிரியா சக்தியாகவும் விளங்குகின்றனர்.தமிழகத்தில், 30 மாவட்டங்களில் உள்ள பக்தர்கள், இலங்கை, மலேஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த பாராயணம் மூலம், நாட்டிற்கு வந்துள்ள நோய் விலகவும், மனிதர்கள் வளமாகவும், சந்தோஷமாகவும் வாழ பிரார்த்திப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியை பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், நேரலையாக ஒளிபரப்பு செய்தன.

கவசம் படித்த விஜயகாந்த்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் சமூக வலைதளபக்கத்தில், கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அவரது பதிவு: ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், ஆறு நாட்களும் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று, ஆடிமாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்தர் சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும், அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை, மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்; தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X