பாழான ராமநாதபுரம் பெரிய கண்மாய்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 பாழான ராமநாதபுரம் பெரிய கண்மாய்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பத்து கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் பெரிய கண்மாய் துார்வாரப்படாமல், கருவேல மரங்கள், வாய்க்கால் மதகு சேதமடைந்து பாழாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருங்குடியில் துவங்கி லாந்தை வரை பெரிய கண்மாய் அமைந்துஉள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் வளர்ந்து மண்மேவி மேடாகியுள்ளன. இதே போல வரத்து வாய்க்கால், மதகுகள் பழுதாகியும், சேதமடைந்துள்ளது.மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது.

கண்மாயை நம்பி 3500 ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பெரிய கண்மாயை துார்வாரவும், மதகுபகுதியில் சேதத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தொருவளுர் விவசாயி பாஸ்கரன் கூறுகையில், பெரிய கண்மாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல்சாகுபடி செய்யப்படுகிறது. அச்சுந்தன்வயல், சாக்காங்குடி, வன்னிவயல், சித்துார், லாந்தை பகுதிகளிலும் நெல்சாகுபடி செய்கின்றனர்.

கண்மாய் துார்வாரப்படாமலும், ஐந்துகண் மதகு வாய்க்கால் செப்பனிடாமல் பாழாகியுள்ளது. இந்தநிலைமை நீடித்தால் ஊரணி வறண்டு விடும், அதன்பின் மானாவாரியாகத்தான் பயிர் சாகுபடி செய்ய முடியும்.பல ஊர்களின் பாசனத்திற்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பெரியகண்மாயை மழைக்காலத்திற்கு முன்னதாக துார்வாரி, சேதமடைந்துள்ள நீர் வரத்து வாய்க்கால், மதகுகளை செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X