பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் பால் ஏ.டி.எம்., மையம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தில், முதன் முறையாககாரைக்குடியில் பால் வழங்க ஏ.டி.எம்.,அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்தவர் சரணவன் 35.இவர் கீழத்தெருவில் பால் ஏ.டி.எம்., மையம் அமைத்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து மிஷினில் நிரப்பி விடுகிறார். மக்கள் தங்களுக்கு தேவையான அளவு பாலை, காலை 5:30 மணி முதல் பகல் 1:00 மணி வரையும், பகல் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.

சரவணன் கூறியதாவது;இயந்திரத்தில் குளிர்சாதனத்துடன் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டி உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் இதில் நிரப்பப் படுகிறது. ரூபாய் மட்டுமின்றி டெபிட் கார்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது. பால் வாங்க வருபவர்கள் பாத்திரம் எடுத்து வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X