சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதிவாலிபர் பலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன சாமி மகன் அலெக்ஸ்சூர்யா, 29, விவசாயி; இவர் டிஎன்15 ஆர்7003 என்ற பதிவெண் கொண்ட ேஹாண்டா ைஷன் பைக்கில் உலகங்காத்தானில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு 11. 45 மணியளவில் சென்றுள்ளார். ஏமப்பேர் பைபாஸ் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அலெக்ஸ்சூர்யா மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே அலெக்ஸ்சூர்யா இறந்தார். அலெக்ஸ்சூர்யாவிற்கு மகிழினி என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது.இதுகுறித்து கள்ளக் குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X