பொது செய்தி

தமிழ்நாடு

'மேட் இன் சிவகங்கா':* பட்டதாரிகளின் உன்னத சேவை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

''கொரானோ வைரஸ் பணம், படை பலத்தை தகர்த்தெறிந்து, 'பாசம், அன்பு' மட்டுமே நிலைத்த வாழ்க்கைக்கு அச்சாரம் என்பதை மனித சமுதாயத்திற்கு உணர்த்திவிட்டது.

நுாறு நாட்களை கடந்து வீட்டில் முடங்கினாலும், இந்த ஊரடங்கு பட்டதாரிகளுக்கு புதிய

உத்வேகத்தை அளித்துள்ளது. 'ஊரடங்கு முடக்கினாலும், நம்பிக்கையை முடக்கவில்லை', என்பதை நிரூபிக்கும் விதமாக சிவகங்கை பட்டதாரிகள் 'மேட் இன் சிவகங்கா' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்''. இதன் தலைவராக சிவகங்கை காமராஜர் காலனி எம்.சேதுபதி பட்டதாரி உள்ளார். இவர் தன்னுடன் 8 பட்டதாரிகளை இணைத்துள்ளார்.

வீட்டிற்கே வரும் சேவைமுதற் கட்டமாக 'மேட் இன் சிவகங்கா' என்ற பெயரில் பட்டதாரிகளை இணைத்து, வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான குண்டூசி முதல் கோழிக்கறி வரை உணவு, மளிகை பொருள், மருந்து , மர பொருட்கள் என உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

மக்கள் விரும்பும் கடையில் இருந்து வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் சேவையில் ஈடுபடுகின்றனர். இவர்களது செயல் 'சிவகங்கை மாநகரம்' என்ற முகநுால் பக்கத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

20 வகை சிறு, குறுதொழில் பயிற்சி

சிவகங்கை, சுதேசி இயக்க தலைவர் எம்.சேதுபதி கூறியதாவது: முதற்கட்டமாக நாங்கள் இணைந்து 'மேட் இன் சிவகங்கா' என்ற உணவு பொருட்கள் வீடு தேடி வழங்கும் திட்டத்தை துவக்கினோம். 5 பட்டதாரிகள் டூவீலருடன் பணிபுரிகின்றனர். சிவகங்கை நகருக்குள் மட்டும் கடையில் இருந்து வீட்டில் சேர்க்கும் உணவு பொருளுக்கு ரூ.20 கட்டணம். மற்ற பலசரக்கு உள்ளிட்ட பொருட்களுக்கு எடையின் தன்மை, துாரத்தை பொறுத்து சேவை கட்டணம் உண்டு.

எதிர்காலத்தில் சுதேசி இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் விளையும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே மக்களை வாங்க வைக்கும் நோக்கில் பணிபுரிவோம். கிராம விவசாயிகளை தத்தெடுத்து அவர்களிடம் விளையும் பொருட்களை அங்கே சந்தைப்படுத்தி, 'உள்நாட்டு உற்பத்தி உள்நாட்டிற்கே' என செயல்படுத்த உள்ளோம்.

இது தவிர குளியல் பவுடர், பற்பொடி தயாரித்தல் உட்பட 20 வகையான சிறு, குறுந்தொழில் பயிற்சியும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும். சுகாதாரத்தை மேம்படுத்த 'பயோடாய்லட்' திட்டமும் கைவசம் உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் உன்னத திட்டம். சிவகங்கை பட்டதாரிகள் 'இணைந்த கைகளாக' செயல்பட துவங்கியுள்ளோம், என்றார். தொடர்புக்கு 81109 54222.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X