திண்டிவனம் நகரத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் நகரத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு

Added : ஜூலை 27, 2020
Share

திண்டிவனம்; திண்டிவனத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.திண்டிவனம் நகராட்சி பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது.நகரத்தின் அனைத்து பகுதியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் கொரோனா தொற்றால் 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 157 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 120 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த 55 வயதுடையவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். திண்டிவனம் நகரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X