பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டு சாப்பாடு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில்,அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வீட்டுச்சாப்பாடுதேடி வருவதோடு, இவர்கள் டீக்கடை, நடைபயிற்சிக்கு வெளியே செல்வதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா தொற்றின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 33பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதுார் காசநோய் மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்படுகிறது. அமராவதிபுதுாரில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 30 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் இருக்கும் சிலர் டீ குடிக்கவும், வாக்கிங் செல்வதற்கும் வெளியே செல்வதாகவும், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து நோயாளிகளுக்கு வீட்டு உணவு வழங்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாத நோயாளிகளால், மருத்துவமனைஊழியர்களும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளும், அச்சத்தில் உள்ளனர்.

மருத்துவ அதிகாரி தர்மர் கூறியதாவது: இங்குள்ள நோயாளிக ளுக்கு தொற்று இருந்தாலும் எவ்வித அறிகுறியும் இருக்காது. நார்மலாகவே இருப்பார்கள். இவர்களுக்கு இங்கு வழங்கப் படும் உணவுபோதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இவர்கள், வெளியே செல்வதற்கு வாய்ப்பில்லை.ஆனால், சிலர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வரவழைப்பது, வீட்டிலிருந்து உணவு வர வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். விரைவில், தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X