பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு கடைபிடிப்புசாலைகள் வெறிச்சோடின

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த முழு ஊரடங்கால் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும், மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியது. இதன்படி இம்மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று நடந்த முழு ஊரடங்கினால் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பெட்ரோல் பங்க், வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. எப்போதும் பிசியாக காணப்படும் சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் ஸ்டோர் ஆகியவை மட்டும் திறந்திருந்தன. சாலைகளில் அவ்வப்போது காவல் துறை சார்பில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் காவல் துறை, சுகாதாரம், நகராட்சி துறையினர் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு பணிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கினையொட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.திண்டிவனம்திண்டிவனத்தில் முழு ஊரடங்கு காரணமாக, மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்குகடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, திண்டிவனத்தில் மருந்து கடைகள், பால் பூத்துக்கள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. நகரத்தில் வாகனங்கள்செல்வதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர்.முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக நகரமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X