பொது செய்தி

தமிழ்நாடு

இரு பெண் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரகண்டநல்லூர் போலீசார் வீரபாண்டி கிராமத்தில் கடந்த 24ம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்து, கொரோனா பரிசோதனைக்கு பின் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியானது. இதில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.சாராய ரெய்டில் ஈடுபட்ட போலீசார், அவர்களை பிடித்து வந்து வழக்குப் பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் என பலரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X