பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் முழு ஊரடங்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ஆறு கட்டமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கிவந்தன. இதில் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கடைகள் இயங்கி வருகிறது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது.விழுப்புரத்தில் 4 வது ஞாயிற்று கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்கள் வழக்கம் போல் வாகனங்களில் சென்று வந்தனர். இதனை அறிந்து . எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நேற்று காலை 6.00 மணி முதல் ஜானகிபுரம், முத்தாம்பாளையம், நான்கு முனை சிக்னல், கிழக்கு பாண்டி ரோடு ஆகிய பகுதிகளில், டவுன் டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமையிலான போலீசார், பேரிகார்டுகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஊரடங்கை மீறி வெளியே வந்த 100 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.இதன்காரணமாக விழுப்புரத்தில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X