பொது செய்தி

தமிழ்நாடு

முடிந்தது நான்காம் கட்ட முழு ஊரடங்குமக்களின் ஒத்துழைப்பால் அமைதியாக

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 முடிந்தது  நான்காம் கட்ட முழு ஊரடங்குமக்களின் ஒத்துழைப்பால் அமைதியாக

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை மாதத்தின் நான்காம்கட்ட முழு ஊரடங்கு மக்கள் ஒத்துழைப்பு காரணமாகஅமைதியாக முடிந்தது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலைஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்என அரசு அறிவித்திருந்தது.

ஜூலை மாதத்தின் கடைசிஞாயிற்றுக்கிழமையான நேற்று சிவகங்கை முழுவதும்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியபொருட்களான பால், மருந்து கடைகள் மட்டுமேதிறக்கப்பட்டிருந்தன.பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த தால் மக்கள் நடமாட்டம் இல்லாமல்ரோடுகள் வெறிச்சோடி கிடந்தன. மக்கள் ஞாயிற்றுக்கிழமைஎன்றால் இறைச்சி கடைகளில் குவிந்து விடுவார்கள்.

அந்த நிலை மாறியது. அசைவ உணவு பொருட்கள்இல்லாததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். முக்கியபணி காரணமாக போலீசார், மருத்துவமனை பணியாளர்கள்மட்டுமே பணிக்கு சென்றதால் ஒரு சில இரு சக்கரவாகனங்கள் மட்டுமே தென்பட்டது.முக்கிய வீதிகளின் சந்திப்பில் போலீசார்வாகனங்களில் செல்பவர்களை சோதனையிட்டு அனுப்பினர்.விதி மீறிய வாகனங்களை எச்சரித்து அனுப்பினர்.

சிவகங்கைநகர் முழுவதும் அமைதியாக காணப்பட்டது. மானாமதுரையில் உள்ள முக்கிய கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேற்கண்ட ஊர்களில் பெட்ரோல் பங்குகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருப்புவனம்,இளையான்குடியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X