திருப்புத்தூரில் கசியும் நீரை மக்கள் குடிக்கும் அவலம்: பல மாதங்களாக வீணாகிறது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 திருப்புத்தூரில் கசியும் நீரை மக்கள் குடிக்கும் அவலம்: பல மாதங்களாக வீணாகிறது

திருப்புத்துார்:திருப்புத்துார் - சிங்கம்புணரி ரோட்டில் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் காவிரிக் குடிநீர் திட்ட ஏர் வால்வில் வெளியேறும் நீரை பிடித்து பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்புத்துார் பேரூராட்சி குடிநீர் திட்டத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கு புதுப்பட்டி தொட்டியிலிருந்துகுழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இக்குழாய் விரிசலடைந்து பல இடங்களில் கசிகிறது. புதிய குழாய்களை மாற்ற மதிப்பீடு தயார் செய்துகுடிநீர் வாரியம் அனுப்பியும் இதுவரை நிதி அனுமதி ஆகாமல் திட்டம் கிடப்பில் உள்ளது.

இதனால் மேல்நிலைத்தொட்டி நிரம்புவது தாமதமாகிறது. அதில் அச்சுக்கட்டுப் பகுதியில் ஏர் வால்வுபகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக குடிநீர் வெளியேறுகிறது. அப்பகுதி மக்கள் அந்த நீரைப் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் குடிநீர் தொடர்ந்து வெளியேறி வீணாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X