சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரப்பன் தேடுதல் வேட்டையில்பணி செய்த போலீசுக்கு பக்கவாதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கடலாடி:கடலாடி அருகே ஆப்பனுாரை சேர்ந்தவர் உமைய சேகர் 48. கபடி விளையாட்டு வீரர். இவர் 1997ல் திருநெல்வேலி ஆயுதப்படையில் வேலை செய்து வந்தார். சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தேவாரம் அணியில் 1998, 1999ல் பணி செய்துள்ளார்.

ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் 2015ல் பணி செய்த போது, எதிர்பாராத விதமாக இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது வரை வீட்டிலேயே படுத்த படுக்கையில் உள்ளார்.உமைய சேகர் கூறியதாவது:சேதமடைந்த அரசு காலனி வீட்டில் வசித்து வருகிறேன். 8ம் வகுப்பு படிக்கும் எனது மகளும், மனைவியும் அவரது தந்தை வீட்டில் வசிக்கின்றனர். எனது தாயார் ஆறுமுகம் 2015 முதல் தற்போது வரை பராமரித்து வருகிறார்.

எனது தாயாரின் முதியோர் உதவித்தொகையும் 7 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா பொது முடக்கத்தால்,உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமலும், சேதமடைந்த வீட்டிலும் வாழ்ந்து வருகிறேன். எனக்குரிய ஊதியம் 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், அன்றாட செலவுக்கே வழியில்லாமல் உள்ளேன். ஆப்பனுார் ஊராட்சிச் செயலாளர் முருகன் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X