சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவாரண நிதியில் முறைகேடு?

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : கொலையான சிறுமிக்கு கிடைத்த நிவாரண நிதியில் முறைகேடு செய்து விட்டதாக, அவரது தந்தை அளித்த புகாரில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் உட்பட நால்வர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில், கடந்த மாதம், 7 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 25, என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். ராஜா கைது செய்யப்பட்டார்.முதல்வர் நிதிசிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகத்தால், 4.85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டன.இதேபோல், தி.மு.க., சார்பில், 5 லட்சம் ரூபாய் உட்பட, பல்வேறு அமைப்புகள் சார்பில், சிறுமியின் தந்தை நாகூரானிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டன.

இந்நிலையில், நிவாரண தொகையை சிலர் பறித்துக் கொண்டதாக, சிறுமியின் தந்தை நாகூரான், நேற்று முன்தினம், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலர் திரவியராஜ், 50, பழனி, 49, பெரியசாமி, 50, இளையராஜா, 40, ஆகிய நான்கு பேர் மீது, ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.புகாரில் சிக்கியுள்ள திரவியராஜ் கூறியதாவது: நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. சிறுமியின் தந்தை குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், தமிழக அரசு வழங்கிய, 9.12 லட்சம் ரூபாயை, எஸ்.பி.ஐ., வங்கியில், சிறுமியின் தங்கை வினோபா பெயரில், நீண்டகால டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

வங்கி டிபாசிட்இதேபோல், தி.மு.க., வழங்கிய, 5 லட்சம் ரூபாய், தே.மு.தி.க., வழங்கிய, 30 ஆயிரம் ரூபாய், சிறுமியின் தந்தை நாகூரான் பெயரில், வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகையை, நான்கு ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.இது தொடர்பான வங்கி புத்தகம், ஆவணங்களின் நகல்களை, மாவட்ட நிர்வாகம், ஆவுடையார்கோவில் தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X