சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரியாணிக்கு பணம் கேட்டவரை தாக்கிய கும்பல் கைது

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகப்பட்டினம் : பிரியாணிக்கு பணம் கேட்ட, ஓட்டல் ஊழியர்களை உருட்டுக் கட்டையால் தாக்கிய கும்பலில் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், கங்களாஞ்சேரியைச் சேர்ந்தவர் பிரவின்குமார், 37; ஓட்டல் உரிமையாளர். இவரது ஓட்டலில், நேற்று முன்தினம் மதியம், சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நால்வர், பணம் கொடுக்காமல் சென்றுஉள்ளனர்.பிரவின்குமார் பணம் கேட்டுள்ளார். அவர்கள், 'பணம் எடுத்து வரவில்லை; வந்து தருகிறோம்' எனக் கூறி ெசன்றனர். இரவு திரும்பி வந்து, 'பிரியாணிக்கு பணம் கேட்கிறாயா' எனக் கேட்டு, ஓட்டலில் அடுப்பு எரிக்க வைத்திருந்த உருட்டுக் கட்டையால், பிரவின்குமாரை தாக்கினர். தடுக்க முயன்ற, ஓட்டல் ஊழியர்கள் இருவரையும், உருட்டுக் கட்டையால் சரமாரி தாக்கினர்;

ஓட்டலில் இருந்த பொருட்களையும் சூறையாடினர். படுகாயமடைந்த மூவரும், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, கங்களாஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீதர், 34, என்பவரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202007:00:13 IST Report Abuse
Girija கன்மணி வழக்கம்போல் பரோட்டா கடையில் ரவுடித்தனமா ? பொன்மணி செல்போன், பியூட்டி பார்லர் கடைக்கு போவியா ? நடு நடுல கையில் உருட்டுக்கட்டை அரிவாள் வெச்சுக்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X