நாட்டுப்புற கலைஞர்கள் பாதிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருவாடானை:திருவாடானை அருகே கடம்பாகுடி, கற்களத்துார்உள்ளிட்ட கிராமங்களில் கரகாட்டம் ஆடும் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர்.கோயில் திருவிழாக்களில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்று கரகாட்டம் நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கடம்பாகுடி கரகாட்ட குழுவினர் கூறியதாவது:தமிழ் மாதங்களில் தை முதல் ஆடி வரை வருமானத்தை தரக்கூடிய மாதங்களாகும். கோயில் திருவிழாக்கள் நடப்பதால் தினமும் எங்களுக்கு அழைப்பு வரும். ஓய்வில்லாமல் கண் விழித்து பல்வேறு ஊர்களுக்கு சென்று இரவு, பகல் பாராமல் நிகழ்ச்சிகளை நடத்துவோம்.கொரோனாவால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X