சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்  கைது

சின்னசேலம் : கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த உலகங்காத்தான் ஆற்காடு மில் அருகே, ஒரு வீட்டில் கருக்கலைப்பு நடப்பதாக, வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜத்திற்கு தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்தினார்.நான்கு பெண்கள்அங்கு, இந்திலி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 42, என்பவர், முறையாக மருத்துவம் படிக்காமல், பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. கருக்கலைப்புக்காக வந்திருந்த நான்கு பெண்களை, ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகேசன், டி.பார்ம்., படித்ததாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

ஆனால், அதற்கான சான்று எதையும் சமர்ப்பிக்கவில்லை. சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிந்து, முருகேசனை கைது செய்தனர்.கடந்த 2018 - 19ல், தவறான மருந்து கொடுத்து, கருக்கலைப்பு செய்ததாக, முருகேசன் மீது இரு வழக்குகள் உள்ளன. போலி கிளினிக் 'சீல்'ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனுாரில், ஜூன், 11ல், வருவாய் துறையினர் நான்கு போலி கிளினிக்குகளுக்கு சீல் வைத்து, மூன்று போலி டாக்டர்களை பிடித்தனர். திமிரி சாலையில், தலைமறைவான ஒரு போலி டாக்டர் நடத்தி வந்த, கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர்.சீல் வைத்த அந்த கிளினிக்கின் பின்புற வழியாக, நோயாளிகளை வரவழைத்து, தலைமறைவான போலி டாக்டர், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக, கலெக்டருக்கு புகார் சென்றது.

ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில், வருவாய்த் துறையினர் நேற்று அந்த கிளிக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனாவுக்கு அங்கு மருத்துவம் பார்த்து வருவதும், அதை நடத்தி வந்தது, ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த காந்தி, 68, என்பதும் தெரிந்தது. ‍அதிகாரிகள் வருகையை அறிந்து, அவர் தப்பியோடி விட்டார்.இதையடுத்து, அந்த கிளினிக் உள்ளே, யாரும் செல்ல முடியாதபடி அனைத்து வழிகளையும் அடைத்து, சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-ஜூலை-202019:59:52 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவர் ஐந்து ரூபாய் டாக்டரா அல்லது ஐந்தாம் வகுப்பு டாக்டரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X