ரவுடி சகோதரர்கள் வெட்டி கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி சகோதரர்கள் வெட்டி கொலை

Added : ஜூலை 27, 2020
Share
மதுரை : மதுரையில், சகோதரர்களான இரு ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மதுரை, எல்லீஸ் நகர் பகுதி போடிலைனைச் சேர்ந்தவர்கள் முருகன், 45; செந்தில், 40. சகோதரர்களான இவர்கள் மீது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எஸ்.எஸ். காலனி ஸ்டேஷனில், ரவுடி சரித்திர பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டின் முன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 10 பேர்

மதுரை : மதுரையில், சகோதரர்களான இரு ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

மதுரை, எல்லீஸ் நகர் பகுதி போடிலைனைச் சேர்ந்தவர்கள் முருகன், 45; செந்தில், 40. சகோதரர்களான இவர்கள் மீது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எஸ்.எஸ். காலனி ஸ்டேஷனில், ரவுடி சரித்திர பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டின் முன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கும்பல் அங்கு வந்து, அரிவாள், பட்டாக் கத்தியால், இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து தப்பியது.போலீசார் கூறியதாவது:அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், வட்டச் செயலருமான ஜெயபாண்டியின் மகன் லோகேஷ் தலைமையிலான குழுவினர், இக்கொலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

என்ன பிரச்னை என தெரியவில்லை.சகோதரர்கள் அப்பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடைகளிலும் மாமூல் வசூலித்துள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலால், கொலை செய்யப்பட்டனரா என, விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X