சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி உடலை பெற 4வது நாளாக மறுப்பு

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருநெல்வேலி : தென்காசி அருகே, வனத்துறை விசாரணையில் இறந்த விவசாயி உடலை வாங்க, நான்காவது நாளாக நேற்றும், குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து, வன அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர், அணைக்கரை முத்து, 76; விவசாயி. இவர், தன் தோட்டத்தில் அனுமதியின்றி, மின்வேலி அமைத்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு, கடந்த 22ல், இரவில் வனத்துறையினர் அழைத்துச் சென்றபோது இறந்தார். அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடலை பெற, குடும்பத்தினர் மறுத்தனர். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதாக அரசு அறிவித்தது.
இருப்பினும், நேற்று நான்காவது நாளாக, அவரது உடலை பெற குடும்பத்தினர் மறுத்து விட்டனர். 'வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.இதற்கிடையே, கடையம் வனத்துறை ரேஞ்சர் நெல்லை நாயகம், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuthu kirukkan - Chennai,இந்தியா
27-ஜூலை-202013:25:20 IST Report Abuse
Karuthu kirukkan இந்த உயிரிழப்பும் , தூத்துக்குடியை போன்ற ஓர் நிகழ்வே ..அதே போன்ற மத்திய புலன் விசாரணை தொடரவேண்டும் ,,பாதிக்கப்பட்ட விவசாய கூலி குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X