சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் சிறுவன் மர்மச்சாவு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே நான்கு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகர்கோவில் அருகே பாம்பன்விளையை சேர்ந்தவர் அருண்ஜெனிஸ். பிளம்பர். இவரது முதல் மனைவி லிபிஜோ. இவர்கள் சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர். சில ஆண்டுகளுக்கு முன் லிபிஜோ இறந்தார். அதன் பின்பு ரதிதேவி என்பவரை அருண்ஜெனிஸ் திருமணம் செய்தார். ரதிதேவிக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது ரதிதேவிக்கு ஐந்து நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அன்று தத்தெடுத்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக அருண்ஜெனிஸ் தெரிவித்தார். சந்தேகமடைந்த லிபிஜோவின் உறவினர்கள் புகாரில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X