செய்திகள் சில வரிகளில் :ராமநாதபுரம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சஷ்டி பூஜை

திருவாடானை: திருவாடானை முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் ஆடி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும். தீபாராதனைகளும் நடந்தன.

குடிநீருக்கு ரூ.10 லட்சம்

திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இத் திட்டத்தின் மூலம் கரையக்கோட்டை, மேலவயல்,பொட்டக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பயனைடைவார்கள்.

நுாலகம் திறப்பு

கீழக்கரை: கீழக்கரை இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் நுாலகம் திறப்பு விழா நடந்தது. சங்க தலைவர் ஆலிம்தவ்ஹீத் தலைமை வகித்தார். கடற்கரை பள்ளி ஜமா அத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன், அஞ்சாரிபு, பொருளாளர் சல்மான்கான் பங்கேற்றனர். துணை தலைவர் அக்ரம் நன்றி கூறினார். தினமும் மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை இயங்கும்.

நுண்ணீர் பாசனத்திற்கு மானியம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நீர் பற்றாக்குறை இருப்பதால் பாசன வசதி இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்ணீர் பாசனமுறையினை அமைப்பதற்கும், மேலாண்மை பணிகளுக்கும் வேளாண்மைதுறை மூலம் மானியம் வழங்கபடுகிறது. நுண்ணீர் பாசன முறையை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் ஆதார வசதியினை ஏற்படுத்துவதற்காக அரசு உருவாக்கியுள்ள இத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம் என உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

பட்டணம்காத்தானில் எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்மநாதசாமி நகர் மூன்றாவது தெருவில் 20 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் இப்பகுதி இருள் சூழ்ந்துள்ளதால் மக்கள் திருட்டு அச்சத்திலும், விஷ ஜந்துக்கள் அச்சத்திலும் வாழ்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்திற்கும், மக்கள்பிரதிநிதிகளிடமும் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குமுறுகின்றனர்.

தாழ்வானமின்கம்பிகளால் அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து கீழச்சிறுபோது,சடையனேரி கிராமங்களுக்கு விவசாய நிலம் வழியே மின்சப்ளை செய்யப்படுகிறது. சடையனேரி அருகே சாலையோரத்தில் உயர்அழுத்த மின்கம்பி தாழ்வாக செல்கிறது. எதிரேவரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது மின்கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளது. இந்த மின்கம்பிகளை உயர்த்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டூவீலரில் சென்ற பெண் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் வடக்கு நாடார் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சுதா 43, இவர் ஜூலை 14ல் கணவருடன் டூவீலரில் தேவிபட்டினத்தில் இருந்து உப்பூர் சென்று உள்ளார். திருப்பாலைக்குடி பாண்டி கோவில் அருகே சென்றபோது டூவீலரில் இருந்து தவறி விழுந்த சுதாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார்.

நிழற்கூரைகளில் மதுபாட்டில்

திருவாடானை: திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் செல்லும் சாலையில் குளத்துார், அரும்பூர், கள்ளிக்குடி விலக்கு, ஆதியூர் உள்ளிட்ட கிராமங்களில் பஸ் ஸ்டாப்களில் நிழற்கூரைகள் உள்ளன. பஸ் போக்குவரத்து இல்லாததால் நிழற்கூரைகளில் அமர்ந்து சிலர் மது அருந்துகின்றனர். மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. ரோந்து செல்லும்போலீசார் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X