நான்காவது ஞாயிறு முழு ஊரடங்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்காவது ஞாயிறு முழு ஊரடங்கு

Added : ஜூலை 27, 2020
Share

ராமநாதபுரம்:தமிழக அரசு உத்தரவின் பேரில் ஜூலையில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு முழுமையாக நடந்தது. கடைசி ஞாயிறன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பெரும்பாலான மருந்து கடைகள் கூட மூடப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின.

காலையில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் சுற்றினர். அவர்களை பிடித்த போலீசார் அபராதம் விதித்தனர். பரமக்குடியில் தேவையின்றி சுற்றித்திரிந்த டூவீலர் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் காலையில் டீ விற்பனை செய்த கடைகளிலிருந்து டீ கேன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X