கிராமங்களில் முகக்கவசம் அணியாத மக்கள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:கொரோனா தொற்று திருப்புத்துார் ஒன்றியத்தில் பரவலாக காணப்பட்ட போதிலும் மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம்முழுமையாக வரவில்லை.

கொரோனா பரவல் தடுப்பு முறை குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்தாலும் மக்களிடம் போதிய மாற்றம் ஏற்படவில்லை. கிராமத்து தெருக்களில் சாதாரணமாக முகக்கவசமின்றி நடமாடுகின்றனர். வெளியூர் செல்லும் போது மட்டுமே அணிகின்றனர். அதிலும் பல பெண்கள் சேலை முந்தானையை அவ்வப்போது முகத்தில் வைத்து சமாளிக்கின்றனர்.

போலீசார் தற்போதுமுகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் அதற்கான மாற்றம் ஏற்படவில்லை. போலீஸ் தரப்பில் கூறுகையில், தற்போது முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதிப்பதற்கான வசதி டிவைசில் இல்லை. இதனால் வாகனங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மட்டும் ஹெல்மெட் அணியாத பிரிவை பயன்படுத்தி அபராதம் விதிக்கிறோம்.

உரிய சாதனம் வழங்கினால் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் பலருக்கும் அபராதம் விதிக்க முடியும்.மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. போலீஸ் ஸ்டேசனுக்கே முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் முகக்கவசம் வழங்கி அணியும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்' என்றார்.

ரேஷன்கடைகளில் மக்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்ட பின்னராவது இதில் மாற்றம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X