பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை- திருச்சி ரயில்காரைக்குடி வரை நீட்டிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்குடி:சென்னை-திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸை காரைக்குடிக்கும், 14 புதிய ரயில் அட்டவணையில் சேர்த்திடவுள்ள மூன்று ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்திட காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் வணிகக்கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறியதாவது;சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளபயணிகள் பெரும்பாலும் திருச்சி வழியாகப் போவது தான் பயனுள்ளதாக உள்ளது. திருச்சி-தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னை செல்லும் ராக்போர்ட் விரைவு ரயிலை காரைக்குடியில் இருந்து இயக்கினால் அதிக வருவாய் கிடைக்கும்.

அதேபோல், ரயில் அட்டவணையில் வெளியிடும்குழுவிற்கு 14 புதிய ரயில்களை அறிமுகம் செய்துள்ளதில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் படியாக மாற்றவும், இதில் திருச்சியிலிருந்து கரூர், சேலம், ஓசூர் வழியில் பெங்களூரு விரைவு ரயிலையும், திருச்சியிலி ருந்து பையப்பனஹள்ளிக்கு வாரம் இருமுறை விரைவு ரயிலையும், திருச்சியிலிருந்து மும்பைக்கு வாராந்திர விரைவு லோக்மான்ய திலக் ரயிலையும், நீட் டிப்பு செய்து மக்களின் கோரிக்கையை நிறை வேற்றிட சென்னை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கும், திருச்சி கோட்ட மேலாள ருக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X